கூடி வாழ்ந்தால் கோடி நன்மை : அதிமுக எம் எல் ஏ கூறியதாக செய்தித் தள டிவீட்

சிலம்பட்டி

சிலம்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக அணிகள் இணைவதில் ஆர்வம் காட்டுகிறார்.

நேற்று நடைபெற்ற ஆர் கே நகர் தேர்தலில் தினகரன் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தது தெரிந்ததே.    அதிமுக வின்  இரு அணிகளும் மோதிய இந்த தேர்தலில் ஆளும் அதிமுக அணி இரண்டாவதாக வந்தது.    மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டிபாசிட் இழந்துள்ளனர்.

பி நீதிபதி எம் எல் ஏ

இது குறித்து உசிலம்பட்டி தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி நீதிபதி கருத்து கூறியதாக தி லீட் என்னும் செய்தித் தளம் ஒரு ட்விட் பதிவு செய்யப்பட்டுள்ளது.   அந்த டிவிட் பதிவில், “உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி நீதிபதி தி லீட் தளத்திடம் “மூத்த தலைவர்கள் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.   கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்னும் பழமொழியை அவர்கள் மனதில் கொள்ள வேண்டும்” எனக் கூறி உள்ளார்.”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/thelede2016/status/944957893203279873