இன்று அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் கூட்டம்!


சென்னை: முதல்வர் ஓபிஎஸின் அதிரடி பேட்டியை அடுத்து இன்று காலை 10 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அருகே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து  அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

இதையடுத்து அவர் உடனடியாக பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பான சூழலில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.