அதிமுக மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்

திண்டிவனம்

விழுப்புரம் தொகுதி அதிமுக மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு ராஜேந்திரன் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட சுமார் 2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

ராஜேந்திரன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜக்காம்பட்டியில் வசித்து வருகிறார். நேற்று அவர் தனது வீட்டில் இருந்து சென்னைக்கு காரில் வந்துக் கொண்டு இருந்துள்ளார். வழியில் இவர் வந்த கார் கட்டுப்பாட்டை மீறி சாலை தடுப்பில் மோதி உள்ளது. இதில் காரில் சென்ற அனைவரும் படுகாயம் அடைந்தனர்.

மருத்துவமனையில் மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன் மரணம் அடைந்தார் படுகாயம் அடைந்துள்ள ஓட்டுனர் அருமைச் செல்வம் உள்ளிட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிமுகவினர் ராஜேந்திரன் மரணத்தால் கடும் சோகம் அடைந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி