பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார் ஸ்டாலின்: தம்பித்துரை குற்றச்சாட்டு

சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை குற்றம் சாட்டி உள்ளார்.

கஜா புயல் விவகாரத்தில் தமிழகஅரசை கடுமையாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி வரும் நிலையில், மு.க.ஸ்டாலின் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார் என மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான  தம்பிதுரை கூறியுள்ளார்.

இன்று கரூரை அடுத்த புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெற்ற தம்பித்துரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு குறித்து தமிழகஅரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு, தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று கூறிய ஸ்டாலின்,  தற்போது பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட செல்லும்போது தனது கட்சிக்காரர்களை போராட தூண்டி விட்டுள்ளார் என்றார்.

இந்த விவகாரத்தில்,   மு.க.ஸ்டாலின் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார். புயல் பாதித்த இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு செய்யும் போது பொதுமக்கள் என்ற போர்வையில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர்… இது கண்டிக்கத்தக்கது.

புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு எவ்வளவு நிதி வழங்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, பெட்டி சாவி மத்திய அரசின் கையில் உள்ளது, அவர்கள் பெட்டியை திறந்தால் தான் தமிழகத்திற்கு நிதி கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.