கோடநாடு விவகாரம்: ஸ்டாலின் பேச தடை கோரிய மனு! உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை:

கோநாடு கொலை கொள்ளை தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பேச தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்  பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தின்போது மக்களிடையே பேசி வருகிறார். இதுகுறித்து ப ஸ்டாலின் பேச தடை கோரி அதிமுக செய்தி தொடர்பாளர் முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தது.

ஏற்கனவே இதுதொடர்பான வழக்கில், அவதூறு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, கோடநாடு விவகாரம் குறித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.