40 தொகுதிகளிலும் அதிமுக-பாமக கூட்டணி தோல்வியடையும்: டிடிவி. தினகரன் உறுதி

சேலம்:

சந்தர்ப்பவாத அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியடையும் என அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் 95 சதவீதம் எங்களுடன் தான் இருக்கிறார்கள். ஜெயலலிதா நினைவிடத்தை அமைக்க கூடாது என்று அறிக்கை கொடுத்த பாமகவுடன் கூட்டணி அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.

அதிமுக ஆட்சியை பற்றி அன்புமணி எவ்வளவு விமர்சனம் செய்தார். தற்போது அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார். இதனை அம்மாவின் ஆத்மா கூட மன்னிக்காது. சந்தர்ப்பவாத அதிமுக, பாமக கூட்டணி 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடையும்.

ஏற்கனவே மக்கள் விரும்பாத கூட்டணி. இது தோற்கப் போகிறவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து எடுக்கும் விழா. இதனை பாமக மற்றும் அதிமுக தொண்டர்கள் எப்படி என்று எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

40 தொகுதியிலும் இவர்கள் இடுப்பில் கல்லைக் கட்டிக் கண்டு கிணற்றில் குதிக்கப் போகிறார்கள். மக்களவைத் தேர்தலில் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என்றார்.