திமுக பிரசாரத்தின் முதல் நாளே அதிமுகவுக்கு பயம் தொற்றி உள்ளது : கனிமொழி

சென்னை

திமுக பிரசாரத்தை ஆரம்பித்த முதல் நாளே அதிமுகவுக்கு பயம் தொற்றி உள்ளதாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இன்று முதல் திமுக தேர்தல் பிரசாரத்தை அக்கட்சியின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் தொடங்கினார்.    அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  அவருடன் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட சுமார் 500 பேரும் கைது செய்யப்படு பிறகு உதயநிதி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த கைது நிகழ்வுக்கு திமுக சார்பில் கடன் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.   திமுக மூத்த தலைவர்களான துரைமுருகன், கே என் நேரு  உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பிரசாரப் பயணத்தை நடத்த உள்ளார்.

இந்நிலையில் மக்களவை திமுக உறுப்பினரான கனிமொழி தனது டிவிட்டரில்,”முதலமைச்சர் எடப்பாடி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.  ஆனால் திமுக தலைவர்களோ எங்கும் செல்லக் கூடாது.  அடிமை அதிமுக அரசுக்கு திமுகவின் பிரசாரத்தின் முதல் நாளே பயம் தொற்றி விட்டது” எனப் பதிந்துள்ளார்..