அதிகமுகவினருக்கு தினகரன் அணி அழைப்பு

பெங்களூரு

“அதிமுகவினர், தினகரன் தலைமையை ஏற்று வர வேண்டும்” என்று தினகரன் அணியைச் சேர்ந்த பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 15 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலையில் இருக்கிறார். மதுசூதன்ன் 7033 வாக்குகள் பெற்று பின்தங்கி இருக்கிறார். அவரைவிடக் குரைவாக மர்ற வேட்பாளர்கள் பெற்றிருக்கின்றனர்.

இந்த நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தினகரன் வெல்வார் என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அவருக்குத்தான் மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்று முன்பிருந்தே சொல்லி வந்தோம்.

எங்களுக்கு சின்னம் இல்லை, ஆட்சி இல்லை, அதிகாரம் இல்லை.. ஆனால் மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அதைத்தான் இத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தியிருக்கிறது. மக்களும் அதிமுக தொண்டர்களும் டிடிவி தினகரனைத்தான் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவு எடுத்துக்காட்டுகிறது.

அதிமுகவினர் தங்களது உண்மையான தலைமை தினகரன்தான் என்பதை உணர்ந்து அவரது பின் அணிவகுக்க வர வேண்டும்” என்று புகழேந்தி தெரிவித்தார்.