Random image

பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் கருணாஸ் சந்திப்பு: எடப்பாடி அதிர்ச்சி

பெங்களூர்:

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுடன், சுயேச்சை எம்.எல்.ஏ கருணாஸ் சந்தித்து பேசினார். இது அதிமுகவில் சலசலப்பை உருவாக்கி உள்ளது. முதல்வர் எடப்பாடி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி தலைவர் டிடிவி தினரகன் இன்று  பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக ஆதரவு எம்எல்ஏ கருணாசும் அவருடன் சென்று சசிகலாவை சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக ஆதரவு கட்சி எம்எல்ஏக்கள் கருணாஸ், தமீம் அன்சாரி, தனியரசு ஆகியோர் டிடிவிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர்.  சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இவர்கள், ஏற்கனவே  டிடிவி ஆதரவாளர்களுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும். ஜெயலலிதா வின் தியாகத்தை கொச்சை படுத்துவதுபோல் தற்போதைய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. டிடிவி தினகரன் ஆதரவாளர்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பேசி சலசலப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

இதற்கிடையில், கருணாஸ் தனக்கு பாதுகாப்பில்லை என்றும் தனது உயிருக்கு உத்தரவாதமில்ல என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில், தற்போது சசிகலாவை சந்தித்துள்ளார். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

18 எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ள நிலையில், தீர்ப்பு அரசுக்கு எதிராக வந்தால் ஆட்சி கவிழும் என எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், கருணாசின் திடீர் சந்திப்பு பல்வேறு யூகங்களை உருவாக்கி உள்ளது.