டில்லி:

இரட்டை இலை தொடர்பான விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்பு கடந்த 15ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் கமி‌ஷன் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், ‘‘இரட்டை இலை சின்னத்தை பெற அ.தி.மு.க. அணிகள் சார்பில் மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர். இதனால் அந்த சின்னத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’’ ªன்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ‘‘அ.தி.மு.க.வின் இரு அணிகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யவேண்டும். சட்டப்படியும், தகுதி அடிப்படையிலும் விசாரணை நடத்தி இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது பற்றி வரும் அக்டோபர் 30ம் தேதிக்குள் தேர்தல் கமி‌ஷன் இறுதி முடிவு எடுக்கவேண்டும்’’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இது குறித்து முடிவு செய்ய தேர்தல் கமி‌ஷன் வரும் 5ம் தேதி விசாரணை நடத்தபடும் என கூறியிருந்தது. இதற்கிடையில் இந்த விசாரணை 6ம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறும் தேர்தல் ஆணையம் இன்று திடீரென அறிவித்துள்ளது.