நாளை ஒரே நாளில் 8200 விருப்ப மனுதாரர்களிடம் நேர்காணல் நடத்தும் அதிமுக

சென்னை

மிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு விருப்ப மனு அளித்துள்ள 8200 பேருக்கும் நாளை ஒரே நாளில் நேர்காணல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் அவரவர் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.   அதிமுக சார்பில் விருப்ப மனு அளிப்பு கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று தொடங்கி இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்துள்ளது.

சென்ற முறை அதிமுக சார்பில் 10,000க்கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்திருந்தனர்.  ஆனால் இம்முறை அதைவிடக் குறைவாகவே விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.    விருப்ப மனு பெறக் கடைசி தேதி முதலில் மார்ச் 5 என அறிவிக்கப்பட்டிருந்தது.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் 2 நாட்கள் முன்னதாகவே மனு பெறுவது முடிக்கப்பட்டது.

இதுவரை 8240 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது.  விருப்ப மனு அளித்த அனைவரிடமும் நாளை ஒரே நாள் நேர்க்காணல் நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.   நாளைக் காலை 9 மணிக்குத் தொடங்கும் நேர்காணல் இரவு 8 மணி வரை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.