3 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் பராக், பராக்! சென்னையில் அதிமுக முக்கிய ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை, சென்னையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்துகிறது.

தமிழகத்தில் 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்  நடைபெறவில்லை.  உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் சிறப்பு அதிகாரிகளின் பதவி காலம், 6 முறை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற  உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.

வாக்காளர் பட்டியலும் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. ஊராட்சி தவிர்த்து அனைத்து அமைப்புகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறும்  என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந் நிலையில் உள்ளாட்சி அமைப்புக்கு தேர்தல் குறித்து அதிமுக முக்கிய ஆலோசனை நடத்துகிறது. சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

கூட்டத்தில், அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்த கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.