டெக்சாஸ்
ந்தையால் கண்டிக்கப்பட்டு காணாமல் போனதாக சொல்லப்பட்ட இந்திய சிறுமியின் தந்தை அளித்த திடுக்கிடும் வாக்குமூலம் இதோ :

பெற்றோரால் ஒதுக்கப்பட்டு அமெரிக்க தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்ட சரஸ்வதி என்னும் ஷெரின் மாத்யூஸ் பால் குடிக்க மறுத்ததால் வெளியே நிற்க வைக்கப்பட்டு காணாமல் போனதாக வளர்ப்புத் தந்தை வெஸ்லி மாத்யூஸ் தெரிவித்தார்.   ஆனால் நேற்று போலீசார் ஒரு குழந்தையின் சடலம் கிடைத்ததை ஒட்டி வெஸ்லியை மீண்டும்  கைது செய்து விசாரித்தனர்.  விசாரணையின் போது அவர் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெஸ்லி தனது வாக்குமூலத்தில், “கடந்த அக்டோபர் ஏழாம் தேதி நான் ஷெரினை பால் குடிக்கச் சொல்லி வற்புறுத்தினேன்.   அவள் தானாக பாலை குடிக்கத் தொடங்கினாள்.    அவள் சரியாக பால் குடிக்காததால் அவளுக்கு நானே பலவந்தமாக பாலை புகட்டினேன்.  அதனால் திடீரென மூச்சு திணறி இரும ஆரம்பித்தால்.  சிறிது சிறிதாக மூச்சு அடங்கி விட்டது.   அவளுடைய நாடித் துடிப்பை பார்த்தால் முழுவதுமாக நின்று போய் இருந்தது.    அதனால் அந்தக் குழந்தை இறந்ததாகக் கருதி அந்த சடலத்தை நான் எனது வீட்டை விட்டு அகற்றினேன்” என தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ஒரு சிறு சுரங்கப் பாலத்தில் இருந்து ஒரு சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தெரிந்ததே.  அந்தச் சிறுமி காணாமல் போன ஷெரினின் அங்க அடையாளங்களை ஒத்திருந்தாலும் இன்னும் அந்த சடலம் ஷெரினுடையது தான் என நிச்சயிக்கப்படவில்லை.   வெஸ்லி குழந்தையை தாக்கிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பீகார் பகுதியில் பெற்றோரால் ஒதுக்கப்பட்டு கேரளா தம்பதியரால் தத்து எடுக்கப்பட்டு அமெரிக்காவில் மரணம் அடைந்த அந்த சிறுமியின் மரணத்துக்கு ஆயிரக்கணக்கானோர் இணையம் மூலம் அஞ்சலி செலுத்துகின்றனர்.   பலரின் கண்ணீர் அஞ்சலி சரஸ்வதி என பெயரிடப்பட்டு ஷெரின் மாத்யூஸ் ஆக மாறிய அந்தக் குழந்தைக்கு செலுத்தப்பட்டு வருகிறது.