பால் கலப்பட விவகாரம்: ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்!

சென்னை,

மிழக சட்டப்பேரவையில் பாலில் கலப்படம் குறித்த கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  பாலில் கலப்படம் எனக் கூறி எந்த நிறுவனத்தையும் மிரட்டும் நோக்கமில்லை என்று கூறினார்.

தனியால் பாலில், பால் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயணம்  கலப்படம் செய்வதாகவும், இதை குடிப்பதால் உடலுக்கு தீங்கு விளைவதாகவும், கேன்சர் நோய் ஏற்படுவதாகவும் அதிரடியாக கூறி பொதுமக்களிடையே பீதியை உருவாக்கினார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

இது தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. தனியார் பால் நிறுவனங்களும், பாலில் ரசாயணம் இருப்பதை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்று சவால் விடுத்தனர்.

அதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், பாலில் கலப்படம் இல்லை என்று ஆய்வு முடிவுகள்  வந்தால் தூக்கில் தொங்க தயார் என்றுகூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து அனைத்து நிறுவன பால்களும் சோதனைக்கு அனுப்பப்பட்டன. இதுகுறித்து வழக்கும் தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, ஆய்வு அனுப்பப்பட்ட 886 பால்களில், 187 பாலில் மட்டுமே கலப்படம் உள்ளது. ஆனால் எந்த பாலில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயணம் கலக்கப்பட வில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

இதன்மூலம், அமைச்சர் சொன்ன பொய் வெட்ட வெளிச்சமானது. இதையடுத்து, பால் முகவர் சங்கத்தினர், அமைச்சர் ஏற்கனவே கூறியபடி,  தற்கொலை செய்ய வேண்டாம்… ராஜினாமா செய்தால் போதும் என்று கோரியிருந்தனர்.

இதுகுறித்து, தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பால் கலப்படம் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கை என்ன  சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

பாலில் கலப்படம் எனக் கூறி எந்த நிறுவனத்தையும் மிரட்டும் நோக்கமில்லை என்றும்,  “மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்” பால் கலப்படத்தை கண்டறிய மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பாலில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.