டில்லி:

முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை இனி தமிழ் மொழியிலும் பெறலாம் என ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

தெற்கு ரயில்வேயின் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட்டுகளில் இனி தமிழ் மொழியும் இடம்பெறுகிறது.

தற்போது சோதனை ஓட்டமாக ஒரு சில ரெயில் நிலையங்களில் இன்று முதல் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. விரைவில் அனைத்து ரெயில் நிலையங்களில் வழங்கப்படும் ரெயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழியில் விவரம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரெயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி கூறும்போது,  “தெற்கு ரயில்வேயின் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளில் இந்தி, ஆங்கில மொழிகளுடன் இனி தமிழ் மொழியும் இடம்பெறும் என்று தெரிவித்தார்.

சென்னை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இன்று முதல்  அமலுக்கு வந்துள்ளது என்றும், இந்த வார இறுதிக்குள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் தமிழ் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறி உள்ளார்.