சென்னை:

சென்னையில் அதிநவீன டூர் திட்டம் மூலம் 483 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சென்னை கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் படி,திருவெற்றியூரில் 6 இடங்களிலும், மணலியில் 2 இடங்களிலும், மாதாவரத்தில் 4 இடங்களிலும், தண்டையார் பேட்டையில் 15 இடங்களிலும்,

ராயபுரத்தில் 13 இடங்களிலும், திருவிக நகரில் 14 இடங்களிலும், அம்பத்தூரில் 9 இடங்களிலும்,

அண்ணா நகரில் 17 இடங்களிலும், தேனாம்பேட்டையில் 16 இடங்களிலும், கோடம்பாக்கத்தில் 15 இடங்களிலும், வலசரவாக்கத்தில் 5 இடங்களிலும்,

ஆலந்தூரில் 5 இடங்களிலும், அடையாரில் 12 இடங்களிலும், பெருங்குடியில் 5 இடங்களிலும், சோழிங்க நல்லூரில் 7 இடங்களிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிநவீன டூர் திட்டம் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள http://bit.ly/3e13E7v என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் நேற்று 203 காய்ச்சல் கிளினிக்குகள் நடத்தப்பட்டன. கிளினிக்குகளில் 10,541 பேர் கலந்து கொண்டனர். இதில் 392 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பு இல்லாத நோயாளிகளுக்கு அவர்களுக்கான நோய் பாதிப்புக்கு ஏற்ப மருந்துகள் வழங்கப்பட்டது என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.