சாதனை: இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் தமிழ்ச்செல்வி!

ந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை தமிழ்ச்செல்வி பெற்றிருக்கிறார்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருநங்கை தமிழ்ச்செல்வி. இவர் இரண்டு வருட போராட்டத்திற்குப்பிறகு, செவிலியர் படிப்பில் இடம் பெற்ற முதல் திருநங்கை என்ற சாதனையை சொந்தமாக்கியுள்ளார்.

நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், திருநங்கை என்பதால் இவருக்கு செவிலியர் படிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  துறை சார்ந்த உயர் அதிகாரிகளிடம் தனது கோரிக்கையை சொன்னபோது சட்டத்தைக் காரணம் காட்டி அவர்களும் கைவிரித்தனர். இதையடுத்து மருத்துவக்கல்வி இயக்கங்கள் தேர்வு குழு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் தமிழ்ச்செல்வி.  இந்த நிலையல் இவரது வழக்கை, மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்தது. மேலும் செவிலியர் (நர்சிங்) படிப்பில் சேர உத்தரவு பிறப்பித்து தீர்ப்பளித்து. இதன்மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை நர்சிங் மாணவி என்ற பெருமையை தமிழ்ச்செல்வி பெற்றுள்ளார்.

இது குறித்து மகழ்ச்சி தெரிவித்த தமிழ்ச்செல்வி, “பெற்றோரின் அரவணைப்பு, திருநங்கைகளை சாதனையாளர்களாக மாற்றும். எனது பெற்றோர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள்” என்றார்

தமிழ்ச்செல்வியின் தாய் அமுதா, “மருத்துவத்துறையில் சேர்ந்துள்ள தமிழ்ச்செல்வி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக  விளங்குவார்” என்கிறார்.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை நிரூபித்திருக்கிறார் திருநங்கை தமிழ்ச்செல்வி.

Leave a Reply

Your email address will not be published.