இனி   வாட்ஸ்அப் பார்த்தால் விளம்பரங்களையும் பார்க்கணும்

வாட்ஸ் அப்பில் உள்ள ஸ்டேட்டஸ் பகுதியில் விரைவில் விளம்பரங்கள் வெளியாக இருக்கின்றன.

இன்று சமூகவலைதளங்களை உலகம் முழுதும் கோடிக்கானோர் பயன்படுத்துகின்றனர். இவற்றில் முக்கிய பங்கு வகிப்பது வாட்ஸ்அப்.

தனித்து இயங்கி வங்க வாட்ஸ்அப் நிறுவனத்தை அண்மையில் பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதிலிருந்து வாட்ஸ்அப்பில் புதிய பல அப்டேட்களை வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப்பில் ஸ்டிக்கர்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தநிலையில் தற்போது ஆட்ஸ் ஃபார் ஸ்டேட்டஸ் என்ற பெயரில் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யும் புதிய வசதியை அப்டேட் செய்ய வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இதன்படி இதுவரை இலவசமாக சேவைகளை வழங்கி வந்த வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு விளம்பர வருவாய் பெருகும்.  ஃபேஸ்புக் மற்றும் யூடியூபில் வீடியோக்களுக்கு இடையே விளம்பரங்கள் வருவது போன்று வாட்ஸ் அப்பிலும் விளம்பரங்கள் இடம்பெறும் என்று தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.