சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகமடைந்து வருவதால்,  டாஸ்மாக், சினிமாதியேட்டர், மால்களை மூட உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிழகத்தில் நேற்று ஒரே நாளில்  2,279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  8,81,752 ஆக உயர்நதுள்ளது. தற்போதைய நிலையில்,  13,983 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிக பட்சமாக சென்னையில் நேற்று  815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,47,148 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், மூத்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், தமிழகத்தில்,  மதுபானக் கடைகள், பார்கள், சினிமா தியேட்டர்கள், கடற்கரைகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், ஜிம்கள், மால்கள், வழிபாட்டுத் தலங்கள், திரைப்பட படப்பிடிப்பு போன்ற அனைத்து  நடவடிக்கைகளையும் மூடுமாறு  உத்தரவிடக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தா வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.