இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : காவல் ஆணையரிடம் மனு

--

சென்னை

கிறித்துவ மதத்தையும் ஏசு நாதர் பற்றியும் அவதூறாக பேசிய இளையராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா கிறித்துவ மதம் குறித்தும் ஏசு நாதர் குறித்தும் அவதூறாக பேசியதாக செய்திகள் வெளியாகின.   இதனால் தமிழகம் முழுவதும் சர்ச்சைகள் கிளம்பின.   அதை ஒட்டி இளையராஜா வுக்கு வழக்கறிஞர் தினேஷ் என்பவர் வக்கீல் நோட்டிஸ் ஒன்றை அனுப்பினார்.  அதற்கு இளையராஜா பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

தற்போது வழக்கறிஞர் தினேஷ் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.   அதில், “இசையமைப்பாளர் இளையராஜா கிறித்துவ மதம் குறித்தும் ஏசு நாதர் குறித்தும் தவறாகப் பேசி உள்ளார்.  இது தொடர்பாக நான் அனுப்பிய வக்கீல் நோட்டிசுக்கும் அவர் பதில் அளிக்கவில்லை.   எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறி உள்ளார்.