தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக வழக்கறிஞர் ஆர் சுதா நியமனம்

டில்லி

மிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக வழக்கறிஞர் ஆர் சுதா நியமிக்கப்பட்டுள்ளதாக அகில  இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலர் கே சி வேணுகோபால் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில்

“மதிப்புக்குரிய காங்கிரஸ் தலைவர் கீழ்க் கண்டுள்ள பிரதேச மற்றும் பகுதி மகளிர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதால் இவர்கள் உடனடியாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

  1. வழக்கறிஞர் ஆர் சுதா – தமிழ்நாடு
  2. சஜிதா – லட்சத்தீவு”

என தெரிவிக்கப்பட்டுள்ளது,.