ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்த் கூட்டணியில் இன்று வெளியான தர்பார்படத்தில் காசு இருந்தால் சிறைக்கைதி கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.

இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார், “தர்பார் திரைப்படத்தில் சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற பணத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கும் மனிதர்களைப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது என கருத்து கூறியுள்ளார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய வசனத்தை தர்பார் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், அவ்வாறு நீக்கப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆதாரம் இல்லாமல் பேசும் ஜெயக்குமார் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வைப்போம் என்றும் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.