சென்னை:
ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை கூறுவதை நம்ப முடியாது. சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் என்ற சுப்பிரமணி, அவர் மலம் கழிக்க வாழை இலை வைத்தது காவல்துறை. ஆனால் ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்கிறது” என்று ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அர்ச்சகர் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரியார் (சுப்பிரமணி)
அர்ச்சகர் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரியார் (சுப்பிரமணி)

சென்னையில்  இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், மின் கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்தது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார்
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் தெரிவித்ததாவது:
“சங்கரராமன் என்ற கோயில் அர்ச்சரக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சங்கராச்சாரியார் என்கிற சுப்பிரமணி, மலம் கழிக்க வாழை இலை வைத்தது. அதே நேரம், சுவாதி என்கிற பெண்ணை கொலை செய்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார், மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை சொல்கிறது. இதை நம்ப முடியாது.
வழக்கறிஞர் ராமராஜ்
வழக்கறிஞர் ராமராஜ்

 
சிறையில் ராம்குமார் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை.   மேலும், சிறையில் வைத்து தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக ராம்குமார் என்னிடம் ஏற்கெனவே தெரிவித்தார். அவர் நல்ல மனநிலையில் இருந்தார்.  விரைவில் தன்னை பெயிலில் எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்” என்று வழக்கறிஞர் ராமராஜ் தெரிவித்தார்.
இதைச் சொல்லும்போது வழக்கறிஞர் ராமராஜ், கதறி அழுதுவிட்டார்.