மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகிய அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனம்

மும்பை: அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட்(ஏஇஎல்), வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சார்பில் சட்ட உதவி வேண்டி வழங்கப்பட்ட அனைத்து கடிதங்களையும் விலக்கி வைக்க வேண்டுமென மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

இந்தக் கடிதங்கள் சில அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக வெளிநாடுகளுக்கு அளிக்கப்பட்டவையாகும். இந்ந நிறுவனங்கள் மீது இந்தோனேஷிய நிலக்கரி இறக்குமதிகள் தொடர்பான மிகை மதிப்பு குற்றச்சாட்டுகள் விசாரணையில் உள்ளன.

யூனியன் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளது அதான் என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம்.

சிங்கப்பூர் உயர்நீதிமன்றம், அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக உத்தரவிட்டிருந்ததை அடுத்து ஏஇஎல் நிறுவனத்தின் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அதானி குழுமத்தின் நிலக்கரி இறக்குமதி தொடர்பான முக்கிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்துதான் சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்திற்கு சென்றது அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்.

You may have missed