சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா சமீம் தனது அடுத்த படமான ஏலே படத்தின் ட்ரைலரை இன்று வெளியிட்டிருக்கிறார்.

இதில் ஐஸ் மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சமுத்திரகனி. விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்களில் நடித்த மணிகண்டன் சமுத்திரகனியின் மகனாக நடித்துள்ளார்.

சமுத்திரகனி கதாபாத்திரத்தின் மரணத்தை தொடர்ந்து நடக்கும் ஏகப்பட்ட விஷயங்களையும் ஏலே ட்ரைலர் தாங்கி வந்திருக்கிறது.

கிராமத்துக் கதையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கபீர் வாசுகி மற்றும் அருள் தேவ் இசையமைத்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், புஷ்கர் காயத்ரியின் வால் வாட்சர் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.