Random image

ஏரோ இந்தியா2019: விமான கண்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெறும்: மத்திய அரசு உறுதி

டில்லி:

2019ம் ஆண்டு நடைபெற உள்ள இந்திய விமான கண்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சி பெங்களூருவிலேயே நடைபெறும் என்று மத்திய பாதுகாப்புத்துறை கூறி உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு விமான கண்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சிகள்  பெங்களூருவில் சிறப்பாக நடைபெற்ற நிலையில், அங்கிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அடுத்த ஆண்டு உ.பி. மாநிலத்தில் நடத்த மத்திய பாதுகாப்புதுறை அமைச்சம் முடிவெடுத்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அடுத்த தடவையும்  பெங்களூருவிலேயே நடத்த வேண்டும் என்று கர்நாடக அரசு மத்திய அரசுக்கு  கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், தற்போது 2019ம் ஆண்டு நடைபெற உள்ள விமான கண்காட்சி மற்றும்  விமான சாகச நிகழ்ச்சி பெங்களூருவிலேயே நடைபெறும் என்று மத்திய அரசு கூறி உள்ளது.

இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை விமான கண்காட்சி நடைபெறும். அப்போது நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த தடவை இந்த நிகழ்ச்சி கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற நிலையில், இந்தர ஆண்டு வேறு மாநிலத்தில் நடத்த மத்திய அரசு முடிவு எடுத்திருந்தது.

ஆனால், அதற்கு பெரும்பாலான மாநிலங்களில் இருந்து வரவேற்பு கிடைக்காத நிலையில், உ.பி.மாநிலத்தில் நடத்த திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்திருந்தார்.

ஏரோ இந்தியா 2019 பிப்ரவரி 20-24 பிப்ரவரி மாதம் 2019 முதல் நடத்த முடிவு செய்துள்ளது. பாதுகாப்புத் துறை இந்த வெற்றிகரமான மற்றும் விளைவாக சார்ந்த நிகழ்ச்சியை செய்ய உறுதிபூண்டிருக்கிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த விமான நிகழ்ச்சிகளுடன் இணைந்து வர்த்தக கண்காட்சியும் நடைபெறும்.

இந்த கண்காட்சியை காண  “உலகத் தலைவர்களும் பெரிய முதலீட்டாளர்களும் விண்வெளி துறையில் தொழில் நுட்பத்தைத் தவிர, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனக்களும், ஏராளமான கல்வியாளர்கள், ஆராய்ச்சி யாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கண்டுகளிப்பார்கள்.