ஆளுநர் மாளிகையில் மலிவு விலை உணவகம் திறப்பு

சென்னை:

தமிழக ஆளுநர் மாளிகையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் மலிவு விலை உணவகம் இன்று திறக்கப்பட்டது.

தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை உணவகள் இயங்கும். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று உணவகத்தை திறந்து வைத்தார். மகளிர் சுய உதவிக் குழு மூலம் தயாரிக்கப்படும் உணவு வகைகள்குறைந்த விலையில் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.