தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது ஆஃப்கானிஸ்தான்..!

டெஹ்ராடூன்: அயர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி.

ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில், அயர்லாந்து அணி நிர்ணியித்த 147 ரன்கள் இலக்கை விரட்டிய ஆஃப்கானிஸ்தான் அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை எட்டியது.

இரு அணிகளுக்கும் வெற்றிக்கான சாத்தியம் சமஅளவில் இருந்தது. ஆனால், முதல் விக்கெட்டை இழந்தாலும், பின்னர் ஆடிய ஆஃப்கன் அணியின் ரஹ்மத் ஷா – இஸானுல்லா ஜனத் இணை, நிதானமாக ஆடி வெற்றியை உறுதி செய்தது.

இப்போட்டியில், ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அதனால்தான், அவர்களால் குறைந்தபட்ச இலக்கை நோக்கி விரட்ட முடிந்தது.

ஆஃப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட் வெற்றி, அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

– மதுரை மாயாண்டி