ஆப்கானிஸ்தான் ராணுவ பெண்அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கும் இந்திய ராணுவத்தினர்

சென்னை:

ந்தியா ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு, சென்னையில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய பல்வேறு நாடுகளுடன் ராணுவம், கல்வி, கலாச்சாரம்  உள்பட பல்வேறு துறைகள் குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளது. அதன்படி பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள், ராணுவத்தினர் என பல தரப்பினர் இந்தியா வந்து பயிற்சி பெற்று செல்வதும், இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  ஆப்கானிஸ்தான், பூடான், பிஜி  போன்ற நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கு இந்திய ராணுவத்தினர் பல நுணுக்கமான பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக  ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் 19 பேர், 2-வது முறையாக 4 வார பயிற்சிக்காக தமிழகம் வந்துள்ளனர்.  அவர்களுக்கு, உடல்ரீதியான பயிற்சி, ஆயுதத்தை கையாளுதல், தந்திர பயிற்சி,  உடற்பயிற்சி, துப்பாக்கி சுடுதல், ஆயுதப்பயிற்சி, ஆங்கில பயிற்சி, தகவல் தொழில் நுட்ப பயிற்சி, தலைமைப்பண்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவர்கள் ஆப்கானிஸ்தான் சென்று, அங்குள்ள மற்ற வீரர்களுக்கு பயிற்சி கொடுக் கும் வகையில், அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கூறிய, ப்கானிஸ்தான் ராணுவ அதிகாரியான கேப்டன் சிராஜுல்லா ரஃபி, ஆப்கானிஸ்தானில்  மேஜர் ஜெனரல் போன்ற பெரிய பதவிகளில் பெண்கள் உள்ளனர்.  ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் சேர்வதற்காக பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார்.

மேலும்,  உலக அளவில் பல்வேறு போர் யுக்திகளை கையாளும் இந்திய ராணுவம்தான் மிகவும் பழமையானது. எனவே இந்திய ராணுவத்தில் உள்ள பயிற்சிகளை அறிந்துகொள்ளும் வகையில் எங்களுடைய பெண் ராணுவ அதிகாரிகளை அழைத்து வந்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு இந்திய ராணுவத்தினர் பயிற்சி வழங்கி வருகின்றனர்.

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் மட்டும் தான் பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

‘கடந்த மாதம் 26-ம் தேதி சென்னையில் தொடங்கிய இந்த பயிற்சி வரும்  26-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Photos credit:  News18 Tamil