டில்லி விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்த ஆப்கன் தம்பதி கைது
டில்லி:
உரிய டிக்கெட் இன்றி விதிகளுக்கு புறம்பாக டில்லி விமான நிலையத்துக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் சையத் உமர். இவரது மனைவி சையேடி. இவர்கள் இன்று டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலைய 3வது முனைய கட்டிடத்தில் சுற்றி திரிந்தனர்.
இவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவரிடமும் விசாரித்தனர். அப்போது காபூல் நகரில் தங்களது மகளை சந்திக்க ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டை பயன்படுத்தி விமான நிலையத்திற்குள் நுழைந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து தம்பதியர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். டிக்கெட் இன்றி விமான நிலைய முனையத்திற்குள் நுழைவது சட்ட விரோத செயலாகும். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.