பாகிஸ்தான்: அமெரிக்கா தாக்குதலில் தலிபான் தலைவர் பலி….ஆப்கன் அதிபர் உறுதி

காபூல்:

பாகிஸ்தான் தலிபான் இயக்க தலைவர் மவுலானா பஸ்லுல்லா (வயது 44). ஆப்கானிஸ்தானில் குணார் மாகாணம் நூர் குல் கலாய் கிராமத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டார். இந்த தகவலை அறிந்த மெரிக்கா அந்த பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதில் மவுலானா பஸ்லுல்லா மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் கொல்லப்பட்டனர். இந்த தகவலை‘வாய்ஸ் ஆப் அமெரிக்கா’ வானொலி செய்தி வெளியிட்டது. ஆனால் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தினர் அமெரிக்காவில் தகவலை மறுத்தனர். அவர் உயிருடன் இருப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் அவர் கொல்லப்பட்ட தகவலை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி உறுதிப்படுத்தியுள்ளார். மக்களின் எதிரி கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.