கொல்கத்தா:

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் அரைஇறுதி போட்டியில், கொல்கத்தாவை எதிர்கொண்ட சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் அணியின், பந்து வீச்சாளர் ரஷீன் கானின் அபார பந்துவீச்சு காரணமாகவே சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.

இதைத்தொடர்ந்து  ரஷின்கானுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பலர், ரஷித் கான் இந்தியாவுக்கு விளையாடி வருகிறார் அவருக்கு இந்திய குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

ரஷித்கானின் மீதான ஆர்வம் காரணமாக  32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் டுவிட்டரில்  ரஷித்கானை  இந்தியக் குடிமகனாகக் கருதிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இது டுவிட்டரில் டிரென்டிங்காகி வருகிறது.

ரஷின்கானின் விளையாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள, இந்தியாவின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர்,

19 வயதான ரஷித்கான், பெரிய பையன்,  உலகிலேயே சிறந்த ஸ்பின்னர் என்பதை தான் உணர்ந்தாக வும், அதை கூற நான் தயங்க மாட்டேன் என்றும், அவரிடம் பேட்டிங் திறமையும் உள்ளது  கூறி உள்ளார்.

பலர் இந்திய அரசாங்கத்திடம் ரஷித்கானுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்றும், ரஷீத் கான் சிறந்தவர். ஆப்கானிஸ்தானுக்கு பதிலாக இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும் .. என்றும் இந்திய வெளியுறவுத்துறைக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், குடியுரிமை விஷயங்கள் உள்துறை அமைச்சகத்தால் தீர்க்கப்படுகின்றன என்று பதில் டுவிட் செய்துள்ளார்.

இந்த விவகாரம் ஆப்கானிஸ்தானிலும் எதிரொலித்துள்ளது.

அதைத்தொடர்ந்து, ரஷித்கான் குறித்து கருத்து பதிவிட்டுள்ள ஆப்கான்  ஜனாதிபதி அஷ்ரக் கானி,

ரஷித்கான் தனது நாட்டின் தேசிய சொத்து என்று கூறி உள்ளார். ஆப்கானியர்கள் ரஷித்கானின் திறமை குறித்து முழுமையான பெருமை கொள்கிறார்கள். எங்கள் வீரர்களை தங்கள் திறமையை காட்ட ஒரு தளத்தை வழங்கிய இந்திய நண்பர்களுக்கு நன்றி கூறுகிறேன்.  ரஷித்கான் கிரிக்கெட்டை உலகிற்கு ஒரு சொத்தாகவே இருக்கிறார். நாம் அவரை விட்டு கொடுக்கவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.