காபூல்:
ப்கன் தலைநகர் காபூலில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 80 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர்.  200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
a
ஹஸாரா சிறுபான்மை இனத்தவர், தலைநகர் காபூலில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போதுதான் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.  இந்த தாக்குதலை தங்களுடைய  தற்கொலை படைப்பிரிவைச் சேர்ந்த இருவர் நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் பயங்கரவாத குழு கூறியிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ பிரிவு இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளது.
“இந்தத்தாக்குதலை நடத்திய அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். தங்கள்து அநீதியான செயலுக்கு அவர்கள் பரிகாரம் தேடியே ஆக வேண்டும்” என்று   ஆப்கன் அதிபர் அஷரப் கனி தெரிவித்துள்ளார்.