ஆப்கன்: தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 பேர் பலி!

 

download

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீபயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.

காபூலில் இன்று நீதிமன்ற ஊழியர்களை ஏற்றிகொண்டு வந்த வாகனம் ஒன்றை குறிவைத்து பயங்கரவாதிகள்  தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர்.  இந்தத் தாக்குதலில் நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத  இயக்கமும்  பொறுப்பேற்கவில்லை. ஆனாலும் தாலிபான் பயங்கரவாத இயக்கமே இத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்று ஆப்கன் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த சில நாட்களுக்கு பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டார். இதையடுத்து, தலிபான் இயக்கத்திற்கு புதிய தலைவராக ஹைபதுல்லா அஹுகுன்சடா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.