ஆப்கன் ஐஎஸ்ஐஎஸ் தலைவன் வான்வழி தாக்குதலில் கொலை….அரசு அறிவிப்பு

காபுல்:

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஆதிக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் மற்றும் தலிபான்களுக்கு எதிராக ஆப்கன் ராணுவம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாட்டு படைகளும் சண்டையிட்டு வருகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதியில் ஆப்கான் ராணுவம், கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. இதில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் ஆப்கன் தலைவனாக செயல்பட்டு வந்த அபு சாட் எர்ஹாபி கொல்லப்பட்டான். மேலும், 10 பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்றும், ஆயுதங்கள் அழிக்கப்பட்டது என்றும் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.