Random image

’என்னிடம் மீண்டும் ஒரு முறை பேசுங்கள்’ – தனது தந்தை மறைவிற்கு வருத்தம் தெரிவித்த ரஷித் கான் டிவிட்டர் பதிவு!

தனது தந்தை மறைந்த செய்தியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் மிகுந்த வருத்தத்துடன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ’என்னிடம் மீண்டும் ஒரு முறை பேசுங்கள்’ என்ற ஹேஷ்டேகுடன் பதிவிட்ட செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

rashid

சிறிய நாடான ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித்கான் இடம்பெற்றிருந்தாலும், அவரது அபார பந்து வீச்சு உலகளவில் உள்ள வீரர்களை மிரள செய்வதாகவே இருக்கும். இளம் லெக் ஸ்பின்னரான ரஷித் கான் சர்வதேச ஒருநாள் போட்டிகள், டி20, ஐபிஎல், பிக் பாஷ், பாகிஸ்தான் லீக், வங்கதேசத்தின் லீக் என அனைத்து போட்டிகளிலும் அதிரடியான பந்து வீச்சாள் தனது முத்திரையை பதித்துள்ளார்.

அதுமட்டுமின்றி மிகக்குறைந்த வயதில் ஒருநாள் போட்டிகள் 100 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமைக்கும் ரஷித் கான் சொந்தக்காரர் ஆனார். இவர் இந்த ஆண்டின் டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் ரஷித் கான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் ரஷித்கான் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவரது தந்தை நேற்று திடீரென காலமானார். இதனை அறிந்ததும் மிகுந்த மனவேதனை அடைந்த ரஷித்கான், தனது தந்தையை இழந்த செய்தியை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

rasifJPG

ரஷித் கான் ட்விட்டரில் கூறுகையில், “ இன்று, நான் என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு மனிதரை இழந்துவிட்டேன். என் வாழ்க்கைக்கு ஒளியேற்றிய என் தந்தை இனி இல்லை. நான் மனவலிமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் (என் தந்தை) எப்போதும் என்னிடம் கேட்பது ஏன் எனத் தெரிந்துவிட்டது. இன்று உங்கள் இழப்பை நான் தாங்கிக்கொள்ள எனக்கு மனவலிமை அவசியம் வேண்டும். ஐ மிஸ் யூ“ ஒருமுறை மீண்டும் என்னிடம் பேசுங்கள் என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ரஷித் கான் தந்தை மறைவிற்கு சக வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆப்கன் அணி வீரர் முகமது நபி ட்விட்டரில், “ என்னுடைய நண்பரின் தந்தை மறைவு என்ன துயரத்தில் ஆழ்த்துகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கும் இந்த தகவலைத் தெரிவித்துவிட்டேன். ரஷித் கான் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், ஆஸ்திரேலயாவில் உள்ள அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி, ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உள்ளிட்ட அணிகளும் ரஷித் கான் தந்தை மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளன.