காயம்: ஆப்கானிஸ்தான் ‘தோனி’ முகமது ஷேசாத் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்….

லண்டன்:

ப்கானிஸ்தான்  அணியின் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரும், ‘ ஆப்கனின் தோனி’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான முகமது ஷேசாத், கால் மூட்டில் எற்பட்ட காயம் காரணமாக,  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

இங்கிலாந்தில் தற்போது உலக கோப்பை கிரிகெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாக உடன் நடைபெற்ற  இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதையடுத்து நாளை நடைபெற உள்ள 13வது லீக் போட்டியில் நியூசிலாந்துடன் மோத உள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான அகமது ஷேசாத் கால் மூட்டில்  ஏற்பட்ட  காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இக்ரம் அலி கில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்டவர்.

இதுகுறித்து ஐசிசி விடுத்துள்ள அறிவிப்பில்; ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ஷேசாத் காயம் காரணமாக தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் இருக்கிறது. ஆதலால், அவருக்கு பதிலாக இக்ரம் அலி கில் சேர்க்கப்பட்டுள்ளார்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கன் வீரர் முகமது ஷேசாத்தின் பேட்டிங் ஸ்டைல் இந்திய வீரர  தோனியின் பேட்டிங்கைப் போல் இருப்பதால், அவரை ரசிகர்கள் ‘ஆப்கனின் தோனி’ என்று அழைக்கிறார்கள்.

கார்ட்டூன் கேலரி