ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட் பந்தயத்தை துவங்கப் போகும் நாடு எது தெரியுமா?

மும்பை

ப்கானிஸ்தான் தனது முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் மேட்சை இந்தியாவுடன் 2018ஆம் வருடம் விளையாட உள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இந்த வருடம் முதல் டெஸ்ட் மேட்ச் விளையாடும் தகுதி அளிக்கப்பட்டுள்ளது.   இதுவரை ஒரு நாள் பந்தயங்களில் சர்வதேச அளவில் விளையாடிக் கொண்டிருந்த இந்த அணியால் இனி சர்வதேச அளவில் டெஸ்ட் பந்தயங்களில் கலந்துக் கொள்ள தகுதி அடைந்துள்ளது.

இந்த அணியின் முதலாவது டெஸ்ட் பந்தயம்  முதலி ஜிம்பாப்வே அணியிண்டன் நடக்கும் என கூறப்பட்டிருந்தது.  ஆனால் ஜிம்பாப்வே அணி மார்ச்சில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டுள்ளதால்  மறுத்து விட்டது.   இதனால் தனது முதல் டெஸ் பந்தயத்தை இந்தியாவுடன் விளையாட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் அதிஃப் மாஷல் மற்றும் அதிகாரி ஷஃபிகுல்லா ஸனிக்சை ஆகியோர்  இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் நேற்று சந்திப்பு நிகழ்த்தினர்.

சந்திப்பின் இறுதியில் இந்தியக் கிரிக்கெட் வாரியம் இந்த போட்டிக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.   வரும் 218ஆம் வருடம் நடைபெற உள்ள  இந்தப் போட்டியின் நிகழ்ச்சி நிரல் குறித்து விரைவில் துபாயில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.   தங்களின் முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் விளையாடுவதில் மகிழ்வதாகவும், இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றியை தெரிவிப்பதாகவும் சனிக்சை தெரிவித்துள்ளார்.