டோராடூன்:

ர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில்  நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான  ரஷித்கான் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தினார். இது உலக சாதனையாக கவுரவிக்கப்படுகிறது.

நேற்று,. ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகள் இடையே  3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஆட்டத்தின்போது டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டை பிடித்து களத்தில் இறங்கியது.  அந்த அணியினர் 20 ஓவரில்  7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது.  முகமது நபி 36 பந்தில், 6 பவுண்டரி 7 சிக்சர் விளாசி 81 ரன்கள்  எடுத்திருந்தார்.

அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தின்போது,  ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் அருமையாகவும், ஆவேசமாக பந்துக்களை வீசினார். அவரது பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அயர்லாந்து வீரர்கள் திணறினர்.

சுமார் 4 ஓவர்கள் பந்து வீசியத் ரஷித்கான்,  27 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த நிலையில், 5 விக்கெட்டுகளை மளமளவென  சாய்த்து சாதனை படைத்துள்ளார்.  ஆட்டத்தின்போது, 4 பந்துகளில் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை தொடர்ச்சி வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

இதன்காரணமாக. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில், 4 பந்துகளில் தொடர்ந்து 4 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். அவருக்கு கிரிக்கெட் அணியினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.