போலியோ இல்லாத நாடானது ஆப்பிரிக்கா! உலக சுகாதார அமைப்பு தகவல்

போலியோ என்னும் இளம் பிள்ளை வாத நோய் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக் கானோர், கை, கால்கள் முடங்கி ஊனமுற்ற நிலை காணப்பட்டது.இந்த நோய் பாதிக்கப்படும் குழந்தைகள் வளர்ச்சி குறைவாகவும், பிற்காலங்களில் ஊனமுற்ற நிலைக்கும் தள்ளப்படுகின்ற னர்.   இந்த நோய்த்தொற்று குறித்து 70 வருடத்திற்கு முன்பு 1950ம் ஆண்டு வாக்கில் கண்டறியப் பட்டு, அதற்கான தடுப்பு மருத்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டு வெற்றி அடைந்தன.
அதைத்தொடர்ந்து, இந்த நோய்க்கு தடுப்பூசி 1955 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.  போலியோ தடுப்பூசி மற்றும்  சொட்டு மருந்துகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதன், இந்த நோய் அடியோடு ஒழிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்தியா உள்பட பல நாடுகளில், போலியோ நோய் முற்றிலு மாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆப்பிரிக்கா நாடு போலியோ இல்லாத நாடாக உலக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
இதுகுறித்து உலகசுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று ஆப்பிரிக்காவின் வரலாற்றில் சிறப்புமிக்க நாள். கடந்த நான்கு ஆண்டுகளாக ஆப்பிரிக்காவில் போலியோ பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. போலியோவிலிருந்து ஆப்பிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்ட பெரியம்மையுடன் போலியோவும் தற்போது இணைகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவில் போலியோ கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவும், போலியோ இல்லாத பகுதியாக ஆப்ரிக்கா மாறிவிட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மேலும்,  உலகிலேயே தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் மட்டும்தான் போலியோ நோய் பரவல் உள்ளதாகவும்  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

1950 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கண்டறியப்பட்ட போலியோ நோய்க்கு 1955ம் ஆண்டு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய்க்கு உலக நாடுகளில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி மற்றும்  போலியோ சொட்டுமருந்துக்களைக் கொண்டு நோய்த் தொற்றை முற்றிலுமாக ஒழிக்க 1988ம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பு  தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.

அன்றைய நிலையில்,  உலகம் முழுவதும் 3லட்சத்து 50ஆயிரம் பேர் போலியோவால் பாதிக்கப்பட் டிருந்த நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே  70ஆயிரத்துக்கும் அதிகமானோர் போலியோ வால்  பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து, உலக நாடுகளை கடுமையாக எச்சரித்த உலகசுகாதார அமைப்பு, இந்தநோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததுடன், அதற்கான தடுப்பு நடவடிக்கை  பணிகளையும் தீவிரப்படுத்தியது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் தீவிர போலியோ ஒழிப்பு பணிகளில் கவனம் செலுத்தியது.

இதன் காரணமாக, அங்கு கடந்த 4 ஆண்டுகளாக யாருக்கும் போலியோ பாதிப்பு ஏற்படவில்லை என்பதால், ஆப்பிரிக்கா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவும் கடந்த 2014ம் ஆண்டு போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக் கது.