ஆப்பிரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைப்போம்- ஜிம்பாப்பே பிரதமர்

ஜிம்பாப்பே பிரதமர் ராபர்ட் முகாபே (வயது 92). இவர்  29 ஆண்டுகளாய் பிரதமராய் உள்ளார். ” வெள்ளையர்களில் ஒருவரை நம்பமுடியும் என்றால் அது  இறந்த வெள்ளையனை மட்டும் தான்”  என்று கருத்து தெரிவித்தவர்.

 

மேற்கத்திய நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) மூலம் ஆப்பிரிக்க தலைவர்களை மட்டுமே தண்டித்து வருகின்றது. மேற்கத்திய நாடுகள் செய்யும் மனித உரிமைமீறல்கள் தட்டிக் கேட்கப் படுவதில்லை. எனவே ஆப்பிரிக்க நாடுகள் தங்களின் சொந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) அமைத்து மேற்கத்திய நாடுகளை தண்டிக்க வேண்டும் என ஜிம்பாப்பே பிரதமர் ராபர்ட் முகாபே  கருத்து தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு: 
மாலி ஜனாதிபதி இப்ராஹிம் கேத்தா மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ஜிம்பாப்பே வந்தார். அதனை முடித்துக் கொண்டு கிளம்பிய அவரை  ஹராரே சர்வதேச விமான நிலையத்தில் வழியனுப்ப வந்தார் ஜிம்பாப்பே பிரதமர் ராபர்ட் முகாபே.

அப்போது  பத்திரிக்கையாளர்களிடம் ” மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும் குற்றங்களை இழைத்துள்ளனர். எண்ணிலடங்கா போர்க் குற்றங்கள் மற்றும் காலனியாதிக்க குற்றங்களை இழைத்துள்ளனர். அதில்  எங்கள்கறுப்பின மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காரணமின்றி பல்லாண்டுகள் சிறையில் வாடியுள்ளனர்.   நான் ஏன் 11 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டேன்? கறுப்பர்கள் நாம் வெள்ளையர்களை எளிதில் மன்னித்து விட்டோம். ஆனால் நமக்கு நியாயம் கிடைக்க வில்லை. உலகில் அனைவருக்கும் நீதி இருக்க வேண்டும். நாம் ஆப்பிரிக்க – ஐசிசி அமைப்பை ஏற்படுத்தி  ஜார்ஜ் புஷ் மற்றும் டோனி பிளேயர் ஆகியோரை விசாரிக்க வேண்டும். அவர்களது தவறுக்கு தண்டனை அளித்திட வேண்டும்” என்றார்.

சூடான் ஜனாதிபதி அல் பஷீர் மீது போர் குற்றங்களைக் சுமத்தி யுள்ளது ஐ.சி.சி. எனவெ,  ஆப்பிரிக்க யூனியன் நாடுகள் உச்சிமாநாட்டில் கலந்துக் கொள்ள வரும்  சூடான் அதிபரை கைது செய்ய உதவும்படி  ஐ.நா. அளித்த நெருக்குதலை உதாசீனப்படுத்தினர்.     அவரை  கைதுசெய்து ஐசிசி தலைமையிடமான நெதர்லாந்துக்கு நாடுகடத்தும் ஐசிசியின்  முயற்சியைக் கடந்த வாரம் முறியடித்தனர்.   இது மேற்கத்திய நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) இருந்து தங்கள் நாடுகள் வெளியேறவும்,  ஆப்பிரிக்க தலைவர்கள் ஒன்று கூடி, தங்களுக்கான ஆப்பிரிக்க – சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) அமைக்கவும் ஒரு புதிய உத்வேகம் கொடுத்துள்ளது.

ஆப்பிரிக்க தலைவர்கள் வைக்கும் முக்கியமான் குற்றச்சாட்டு என்னவென்றால், ” ஈராக் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உட்பட சக்தி வாய்ந்த மேற்கத்திய நாடுகள் செய்யும் கொடுமைகளை ஒரு கண்களை மூடிக்கொள்ளும் ஐ.சி.சி., ஆப்பிரிக்க தலைவர்களை மட்டும் குறிப்பாய் தண்டித்து வருகின்றது” என்பதாகும்.

கடந்த வாரம் தென் ஆப் பிரிக்கா ஜோக்கன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஒரு ஆப்பிரிக்க யூனியன் நாடுகள் உச்சிமாநாட்டில், அதன் உறுப்பு நாடுகள் சம்மதத்துடன் ” ஒரு ஆப்ரிக்க நீதி மற்றும் மனித உரிமைகள் நீதிமன்றம் ” அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
கென்யா ஜனாதிபதி உகுரு கென்யட்டா தான் தேர்ந்தெடுக்கப்பட்ட 2007-2008 தேர்தலில் நடைபெற்ற இனக்கலவரத்தின் காரணமாக அவர்மீது சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடபெற்று வந்தது. அதில் அவர் விடுதலையானார்.
அவர் இம்மாநாட்டில் பேசுகையில், ” நாம் அமைக்கவுள்ள புதிய நீதிமன்றத்தை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது. நமக்கு $ 1 மில்லியன் நிதி தேவை” என்றார். கென்ய துணை ஜனாதிபதி வில்லியம் ருட்டோ மீது இன்னும் இரண்டு வழக்குகள் ஐசிசியில் இன்னும் நிலுவையில் உள்ளன.

ஒருதலைபட்சமான  சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) :
சர்ச்சைக்குரிய ஐசிசி 2003 செயல்படத் தொடங்கியது. அது முன்னாள் யூகோஸ்லாவியா, ருவாண்டாஆகிய இரண்டு ஐ.நா. தீர்ப்பாயங்களின் தொடர்ச்சியாய் தனியாய் செயல்படத் துவங்கியது. ரோம் ஒப்பந்தத்தில் உருவான ஐ.சி.சியில் பெரும்பாலான ஆப்பிரிக்க யூனியன் நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. துவக்கத்தில் ஐசிசி பொதுவாய், உலகில்  எல்லா நாடுகளிலும் நடைபெறும்  மனிதகுலத்திற்கு எதிரான இனப்படுகொலை வழக்குகள், போர்க் குற்றங்கள் மற்றும் குற்றங்களை விசாரிக்க உருவாக்கப்பட்டது. ஆனால் இதுவரை இத்தகைய  ஐசிசி விசாரித்துள்ள ஒன்பது நாடுகளும் ஆப்பிரிக்க நாடுகள் ஆகும். மேற்கத்திய நாடுகள் செய்யும் அத்துமீறல்கள் இதுவரை ஐ.சிசியால் விசாரிக்கப்பட்டதில்லை. இது அப்பட்டமாக வடக்கு – மேற்கு பாரபட்சத்தை வெளிக்காட்டுகின்றது என ஆப்பிரிக்க தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.