டெல்லி ரயிலில் ஆப்ரிக்க பெண்களிடம் அத்துமீறல்

டெல்லி:

ஆப்ரிக்கர்கள் மீதான தாக்குதல் சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தான் நொய்டாவில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த விவகாரத்திற்கு ஆப்ரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயலில் பயணம் செய்த 2 ஆப்ரிக்க பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாயினர். மெட்ரோ ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆண் பயணிகள் சிலர் அந்த பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அந்த பெண் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடன் இருந்த மற்றொரு ஆப்ரிக்க பெண் அவருக்கு ஆதரவாக தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அந்த பெண் தனது மேலாடையை கழட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகியுள்ளது.