விமான விபத்தில் பலி..  மனைவிக்கு ஏழரை கோடி இழப்பீடு..

கேரளாவைச் சேர்ந்த மகேந்திரா கொட்கானி என்பவர், ஐக்கிய அமீரகத்தில் உள்ள பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருந்தார்.

சொந்த ஊருக்குக் கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்தார்.

மங்களூரு விமான தளத்தில் இறங்கும் சமயத்தில் அந்த விமானம் மலைக்குன்றின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது.

அந்த விபத்தில் உயிர் இழந்த 158 பேரில் மகேந்திராவும் ஒருவர்.

அவர் குடும்பத்துக்கு 7 கோடியே 35  லட்சம் ரூபாய்  இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேசிய  நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம்  உத்தரவிட்டது.

’’இது போதாது’’ என்று அவர் குடும்பத்தார், உச்சநீதிமன்றத்தை அணுகினர்.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மகேந்திரா குடும்பத்துக்கான இழப்பீட்டை 7 கோடியே 64 லட்சமாக அதிகரித்து ஆணையிட்டது.

மகேந்திராவின் மனைவி, மகன், மற்றும் மகள் ஆகிய மூவருக்கும் இந்த நஷ்ட ஈடு கிடைக்கும்.

ஒரு அதிசயம் என்ன வென்றால்-

விபத்து நடந்து சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு மகேந்திரா குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வந்துள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்