பாரமுல்லா

சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீரில் மீண்டும் ரயில் சேவைகள் தொடரப்பட்டுள்ளன.

நாடெங்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்ற வருடம் மார்ச் முதல் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.   இதையொட்டி ரயில், சாலை, விமானம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துக்களும் நாடெங்கும் நிறுத்தப்பட்டன.   அவ்வகையில் காஷ்மீர் மாநிலத்திலும் ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.

தற்போது இந்தியாவில் ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.  மத்திய அரசு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து வருகிறது.   அந்தந்த மாநிலங்களில் உள்ள கொரோனா பாதிப்பின் அடிப்படையில் தளர்வுகள் மாநில வாரியாக அறிவிக்கப்படுகின்றன.

அவ்வகையில் 11 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ரயில் சேவை தொடங்கி உள்ளது.  இதில் முதல்  கட்டமாக பனிகல் – பாரமுல்லா இடையிலான ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.  மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இதனால் சுற்றுலாத்துறை ஊக்கம் பெறும் எனவும் விரைவில் மற்ற ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என கூறி உள்ளார்.