12 ஓவர்கள் கடந்த நிலையில்106 ரன்களை எட்டிய கொல்கத்தா அணி!

சென்ன‍ை: ஐதரபாத் அணிக்கெதிரான 14வது ஐபிஎல் 3வது லீக் போட்டியில், கொல்கத்தா அணி 12 ஓவர்கள் கடந்த நிலையில், 1 விக்கெட்டை இழந்து, 106 ரன்களை எடுத்துள்ளது.

அந்த அணியின் துவக்க வீரர் நிதிஷ் ரானா 43 பந்துகளில் 65 ரன்களை எட்டியுள்ளார். மொத்தம் இதுவரை 2 சிக்ஸர்கள் & 8 பவுண்டரிகளை விளாசியுள்ளார். கில் அவுட்டான நிலையில், தற்போது மூன்றாம் நிலை வீரர் ராகுல் திரிபாதி களத்தில் உள்ளார். அவர் 34 ரன்களை அடித்துள்ளார்.

கொல்கத்தா அணி, எதிர்வரும் ஓவர்களில் விரைவாக விக்கெட்டுகளை பறிகொடுக்காத பட்சத்தில், கடைசி ஓவர்களில் நன்றாக அடித்துஆடி, ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கையை 200க்கு கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதராபாத் அணி, இதுவரை 6 பெளலர்களை களத்தில் இறக்கிவிட்டது. நடராஜன் 2 ஓவர்களில் 21 ரன்களைக் கொடுத்துள்ளார். ரஷித் கானுக்கு மட்டுமே 1 விக்கெட் கிடைத்துள்ளது.