கொரோனா : சென்னை நகரில் 13 நாட்களுக்குப் பிறகு 1000க்கு குறைவான பாதிப்பு

சென்னை

சென்னை நகரில் இன்று 13 நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்குக் கீழ் இறங்கி உள்ளது.

bty

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் இன்று 1515 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை சுமார் 48,019 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்

இதில் சென்னையில் பாதிப்பு அதிக அளவில் இருந்தது.

தினசரி சென்னையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

13 நாட்களுக்கு பிறகு அது இன்று குறைந்துள்ளது.

இன்று சென்னையில் 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்துடன் சென்னையில் மொத்த 34245 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.