கொச்சி விமான நிலையம் மீண்டும் இயங்க தொடங்கியது

கொச்சி

வெள்ளத்தினால் 15 நாட்கள் மூடப்பட்ட கொச்சி விமான நிலையம் மீண்டும் இயங்க தொடங்கியது.

கேரளாவில் கனமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது.  இதனால் பல லட்சக்கணக்கான வீடுகள் அழிந்தன.   சாலைகள் பாழாகி போக்குவரத்து தடைபட்டது.  கடும் மழை காரணமாக கொச்சி விமான நிலையத்தினுள் வெள்ளம் புகுந்தது.  அதனால் விமான சேவை  பாதிக்கப்பட்டு விமான நிலையம் 15 நாட்களாக மூடப்பட்டது.

தற்போது கேரளாவில் மழை நின்று விட்டதால் வெள்ளம் வடிந்து வருகிறது.  நிவாரணப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.      ஏற்கனவே விமான சேவை கொச்சி கடற்படை விமான நிலையத்தில் இருந்து தொடங்கியது.

தற்போது கொச்சி விமான நிலையத்தில் பாரமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன.  ஆகையால் இன்று முதல் வழக்கமான விமான சேவைகள் கொச்சி விமான நிலையத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளன.

You may have missed