நூறு ஆண்டு கால கிறித்துவ கல்லூரியில் முதல் முறையாக இந்து முதல்வர்

மும்பை

மும்பையில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரியில் கடந்த 150 ஆண்டுகளில் முதல் முறையாக இந்து ஒருவர் முதல்வராக பணி புரிய உள்ளார்.

மும்பையில் உள்ள பிரபல கிறித்துவக் கல்லூரி செயிண்ட் சேவியர் கல்லூரி ஆகும்.   கிறித்துவ நிர்வாகத்தினரால் நடத்தப்படும் இந்தக் கல்லூரி 150 ஆண்டுகள் பழமை வாயந்ததாகும்.  இந்தக் கல்லூரியில் இந்த 150 ஆண்டுகளில் இதுவரை முதல்வராக பணியாற்றிய அனைவருமே கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 150 ஆவது வருடத்தில் கிறித்துவர்கள் நிர்வாகத்தில் உள்ள இந்தக் கல்லூரியின் முதல்வராக கிறித்துவர் அல்லாத ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.   இந்தக் கல்லூரியின் தாவரவியல் பிரிவின் தலைவராக பணிபுரியும் இந்து மதத்தை சேர்ந்த ராஜேந்திர ஷிண்டே என்னும் பேராசிரியர் தான் அவர்.   இந்தக் கல்லூரியின் 24ஆம் முதல்வராக வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து இவர் பொறுப்பு ஏற்க உளார்.

நாசிக் பகுதியை சேர்ந்த ராஜேந்திர ஷிண்டே ஒதா என்னும் கிராமத்தில் பள்ளிப் படிப்பை முடித்தவர்.  அதன் பிறகு 1978 ஆம் வருடம் மும்பையில் தனது கல்லூரிப் படிப்பை தொடங்கினார்.   மும்பை செயிண்ட் சேவியர் கல்லூரியில் சுமார் 35 வருடங்களாக பணி புரியும் ஷிண்டேவின் வயது 55 ஆகும்.

நமது நாட்டில் கிறித்துவர்களால் நடத்தப்படும் கொல்கத்தாவில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரி மற்றும் டில்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி மற்றும் சென்னை கிறித்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இதுவரை கிறித்துவ மதத்தினர் மட்டுமே முதல்வர்களாக பணி புரிந்துள்ளனர்.   மும்பை செயிண்ட் சேவியர் கல்லூரியில் மட்டுமே கிறித்துவர் அல்லாத ஒருவர் முதல்வராக பணி புரிய உள்ளார்.