17 வருடங்கள் கழித்து மீண்டும் மன்மத ராசா பாடலுக்கு டான்ஸ் ஆடிய சாயா சிங்……!

‘முன்னுடி’ என்ற தேசிய விருது பெற்ற கன்னட படத்தின் மூலம் 2000ம் ஆண்டு திரையுலகில் கால்பதித்தவர் தான் நடிகை சாயா சிங்.

தனுஷ் – சாயா சிங் நடித்திருந்த திருடா திருடி படம் 2003ல் திரைக்கு வந்தது. அந்த படத்தில் வரும் மன்மத ராசா பாடல் மிகப்பெரிய ஹிட்.

17 வருடங்கள் கழித்து மீண்டும் மன்மத ராசா பாடலுக்கு நடிகை சாயா சிங் நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒரு வருடத்திற்க்கு முன்பு சாயா சிங் சிவசங்கர் மாஸ்டரை சந்தித்த போது அவருடன் ஆடி இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்

அவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. பலரும் அந்த பாடலுக்கு நடனம் அமைத்தது சிவசங்கர் மாஸ்டர் தானா என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.