2013க்குப் பின் பாகிஸ்தான் முதலீட்டாளர்களுக்கு குஜராத் அரசு மீண்டும் அழைப்பு

கமதாபாத்

டந்த 2013க்குப் பின் குஜராத் மாநிலத்தில் நடக்கும் முதலீட்டாளர்களுக்கு குஜராத் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் குஜராத் அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறது.   இதில் உலகெங்கும் இருந்து பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொள்கின்றனர்.   கடந்த 2013 ஆம் வருடம் ஜனவரி 9 மற்றும் 10 ஆம் தேதி மாநாட்டுக்கு முன்பான வாங்குவோர் விற்போர் சந்திப்பு நடந்தது.   அதில் பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதிகளாக 22 பேர் கலந்துக் கொண்டனர்.

அந்த வருடம் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி  காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான்  ஆதரவு தீவிரவாதிகளால் வன்முறை ஏற்பட்டது.  அதன் காரணமாக பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஜனவர் 12-10 ஆம் தேதி நடந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளாமல் திரும்ப நேரிட்டது.    அதன் பிறகு பாகிஸ்தான் நாட்டுக்கு அழைப்பு விடுப்பதை குஜராத் மாநில அரசு நிறுத்திக் கொண்டது.

சென்ற வருடம் வரை பாகிஸ்தான் நாட்டுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் அந்நாட்டு பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதில்லை.   இந்த வ்ருடம் வரும் ஜனவரி மாதம் 18-20 ஆம் தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.   இந்த வருட மாநாட்டில் கலந்துக் கொள்ள பாகிஸ்தானுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாகவும் இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதிநிதிகள் 7 பேர் கலந்துக் கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து அரசு தரப்பில் கருத்து எதுவும் சொல்ல மறுத்துள்ளனர்.   ஆனால் அரசுஆவணங்களில் பாகிஸ்தான் நாட்டின்ஃபைசலபாத் பகுதியில் இருந்து இருவர், இஸ்லாமாபாத், பேஷாவர், கராச்சி மற்றும் பஞ்சாப் பகுதிகளில் இருந்து தலா ஒருவர் வர உள்ளதாக தெரிய வந்துள்ளது.

குஜராத் அரசின் சார்பில் இந்த மாநாட்டை நடத்தும் குஜராத் வர்த்தக மையத்தின் தலைவர் ஜைமின் வாசா, “இந்த மநாட்டில் பாகிஸ்தான் மட்டுமின்றி 45 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வர உள்ளனர்.  நாங்கள் அவர்கல் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை விட வர்த்தக முன்னேற்றத்தை மட்டுமே கவனிக்கிறோம்.   இந்த மாநாட்டின் நோக்கமே வர்த்தக மேம்பாடு என்பதாகும்” என தெரிவித்துள்ளார்.